ஆந்திராவில் கணவனின் மூன்றாவது திருமணத்திற்கு மனைவிகளே ஏற்பாடு செய்த சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. கிஞ்சுரு கிராமத்தைச் சேர்ந்த பந்தன்னாவின் முதல் மனைவிக்கு குழந்தை பாக்கியம் இல்லை. ஆகையால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதிக்கு ஒரு மகன் இருந்தும் அடுத்த குழந்தை பிறக்கவில்லை. இதனையடுத்து குழந்தை பெற்றுக் கொள்வதற்காக மனைவிகளே பந்தன்னாவுக்கு மூன்றாவது திருமணம் செய்து வைத்துள்ளனர்.