உலகளவில் பெண் குழந்தைகள் விரும்பி விளையாடும் பொம்மைகளில் பார்பியும் ஒன்று. ஆரம்பத்தில் ஒரே மாதிரியான பொம்மைகளை தயாரித்துவந்த மேட்டல் நிறுவனம், தற்போது வெவ்வேறு நிறங்களில், வெவ்வேறு ஆடைகளுடன் வடிவமைக்கிறது. அந்த வரிசையில் அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மாற்றுத் திறனாளி பொம்மைகள் உருவாக்கப்படுகின்றன. அதில், கண் பார்வையற்ற பார்பி அனைவரையும் கவர்ந்துள்ளது.