வயநாடு நிலச்சரிவு சம்பவம் கேரளாவில் கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. நூற்றுக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. தற்போது, இடைவிடாது பெய்து வரும் கனமழையால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாலையில் இருந்தே மழை பெய்து வரும் நிலையில், தற்போது இருள் காரணமாக மீட்புப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. சூரல்மலையில் தற்காலிக இரும்புப் பாலம் கட்டும் பணி மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.