டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது. மழை காரணமாக டெல்லியில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னையில் இருந்து டெல்லி செல்லும் 2 இண்டிகோ விமானங்களும் அங்கிருந்து சென்னை வரும் இரண்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தவிர அனைத்து இன்டிகோ விமானங்களும் 30 நிமிடங்கள் தாமதமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.