சென்னையில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருவதால் விமான சேவை பாதிக்கப்பட்டது. கனமழை காரணமாக சென்னையில் 15 விமானங்கள் தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதில் 4 விமானங்கள் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மொத்தம் 31 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். கனமழை காரணமாக சென்னையில் விமான பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.