மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. திருமங்கலம் நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், 400-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என நேற்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருந்தார். ஆனால் எழுத்துப்பூர்வ அறிவிப்பு வரவில்லை எனக்கூறி திட்டமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.