விசிக தலைவர் தொல் திருமாவளவனிடம், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரிடம் பிடித்தது என்ன என்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கலைஞரிடம் அவருடைய அளப்பறிய சகிப்புத் தன்மையும், 24 மணி நேரமும் விழிப்பாக இருந்து அரசியல் கட்சியை வழிநடத்தும் திறனும் பிடிக்கும் என்றார். மேலும் ஜெயலலிதாவின் துணிச்சலான செயல்பாடும், ஆட்சி நிர்வாகத்திறனும் மிகவும் பிடிக்கும் என்றும் அவர் கூறினார்.