தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம். கருணாநிதி என்ற பெயரில் நினைவு நாணயம் ஒன்றை வெளியிட தமிழக அரசு விரும்பியது. இதற்காக நூறு ரூபாய் மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்த நிலையில் தற்போது அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.