வனவிலங்குகளால் உயிரிழப்போரின் கருணை தொகையை 5 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஏற்படும் மோதலை குறைக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. ரயிலில் யானைகள் அடிபடுவதை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது