விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஜூலை எட்டாம் தேதி மாலை 6 மணி முதல் ஜூலை 10ஆம் தேதி மாலை 6.30 மணி வரை தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட தமிழக தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதை மீறி கருத்துக்கணிப்புகளை வெளியிடுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.