நான் கருப்பாக குள்ளமாக இருப்பதால் என் பேச்சை மக்கள் கேட்பதில்லை என்று சீமான் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும் 60 ஆண்டுகால குப்பையை ஐந்து ஆண்டுகளில் அகற்றுவது சிரமம் என்று திராவிடக் கட்சிகளை சீண்டிய அவர், திமுகவை அகற்றாமல் இந்தி மண்ணில் நல்ல அரசியல் இருக்காது. தமிழன் என்பது தான் எனது அடையாளம். நான் போதிக்கும் போது உங்களுக்கு இது புரியாது பாதிக்கும் போது தான் உங்களுக்கு புரியும் என்று சீமான் கூறியுள்ளார்.