கர்நாடகாவில் அரசு வேலைவாய்ப்பில் அம்மாநிலத்தைச் சேர்ந்த மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக கர்நாடக அமைச்சரவை அதிரடி முடிவு எடுத்துள்ளது. அதன் படி, நிர்வாக நிலை பணிகளில் 50% & மேலாண்மை அல்லாத பணிகளில் 75% பூர்வீக மக்களுக்கு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. கர்நாடகாவில் பிறந்து, அங்கேயே 15 ஆண்டுகளாக வசிப்பவர்கள், கன்னடத்தில் எழுதவும் பேசவும் தெரிந்தவர்கள்தான் பூர்வீக மக்களாக கருதப்படுவர்.