கர்நாடகாவின் ஹாவேரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். குலதெய்வ கோவிலுக்கு சென்று திரும்பிய போது இந்த விபத்து நடந்துள்ளது. வேனில் சென்ற மேலும் 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தில் வேன் முற்றிலும் நொறுங்கியதால் உடல்கள் நசுங்கின. சடலங்களை மீட்க தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சிரமப்பட்டனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.