கர்நாடகாவின் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரை முதல்வராக்க வேண்டுமென்ற குரல், மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. ஒக்காலிக மஹாசமஸ்தானத்தின் மடாதிபதி இந்த விவாதத்தை மீண்டும் தொடங்கியுள்ளார். ஆனால், சித்தராமையாவை பதவியில் இருந்து இறக்கினால், போராட்டம் வெடிக்கும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், உட்கட்சி கோஷ்டி மோதலை காங்கிரஸ் தலைமை தடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.