கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு விநாடிக்கு 65,748 கனஅடியிலிருந்து 75,748 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி கர்நாடகாவில் உள்ள முக்கியமான 3 அணைகளிலிருந்து மொத்தமாக 75,748 கனஅடி நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.