தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு நினைப்பது முட்டாள்தனம் என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார். இப்படி அனைத்து மாநிலங்களும் உள்ளூர் மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினால் அது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றார். ஒவ்வொரு குடிமகனுக்கும் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் வாழவும், வேலை செய்யவும் உரிமை உண்டு என தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.