தமிழகத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை கற்பித்தல், பள்ளி நிர்வாகத்தை கவனிப்பதற்கு மட்டும் ஈடுபடுத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில், தலைமை ஆசிரியர்களுக்கு சில நிர்வாக பொறுப்புகள் இருந்தாலும் அவர்களின் முதன்மை கடமை கற்பிப்பது தான் என குறிப்பிட்ட ஹை கோர்ட், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை சாதாரண மனிதர்களைப் போல நடத்தக்கூடாது என்று அறிவுரை வழங்கியுள்ளது.