தமிழக அரசின் கலைச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. 50 வயதை கடந்த மரபு வழி கலை வல்லுநர்கள் , நவீன பாணி கலை வல்லுனர்கள், சிறப்பு கலைஞர் போன்றோர் நுண்களைத் துறையில் செய்த சாதனைகளை பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் வருகின்ற ஜூலை 1ஆம் தேதிக்குள் கலை பண்பாட்டுத்துறை இயக்குனர், தமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாம் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை -08 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.