கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 40,000 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பயனாளிகளுக்கு ஆகஸ்ட் 15க்குள் ஆணைகள் வழங்கப்படும் என ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தில் ஒரு வீட்டிற்கு ரூ.3.10 லட்சம் வழங்கப்படும். இந்நிலையில் நடப்பு ஆண்டில் வீடு கட்டுவதற்கு ரூ. 3,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குடிசையில் வாழ்பவர்கள், கேவிவிடி மறு சர்வே பட்டியலில் தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டவர்கள் இந்த திட்டத்தின் பயனாளிகள் ஆவர்.