கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் இந்த ஆண்டு 1 லட்சம் வீடுகள் கட்டப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், இத்திட்டத்திற்காக ₹3,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 2030க்குள் குடிசை இல்லா தமிழகம் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். அத்துடன், கடலூர், திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் சமத்துவபுரங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.