கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியை முதல்வர் அல்லது அமைச்சர் உதயநிதி நேரில் சென்று பார்வையிட ஹை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கள்ளச்சாராய பலி தொடர்பான வழக்கு விசாரணையில், கல்வராயன் மலையில் தான் கள்ளச்சாராயங்கள் தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுவதால் அங்கு முதல்வர் நேரில் செல்ல உத்தரவிட்டது. அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.