தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் பேசிய முதல்வர், 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் இந்தியாவில் உள்ள முதன்மை கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ ஐ எம் போன்றவற்றில் சேரும்போது அவர்களுக்கான கல்வி செலவு முழுவதையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.