தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் விருது வழங்கி வருகின்றார். இந்த நிலையில் விருது வழங்கும் விழாவில் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக பேசிய விஜய், கல்வி கற்பதே கொண்டாட்டம் தான், ஜாலியா படிங்க, மன அழுத்தம் அடையாதீங்க, உலகம் ரொம்ப பெருசு, வாய்ப்புகள் கொட்டி கிடக்கு, ஒன்னு ரெண்டு மிஸ் ஆனாலும் கவலைப்பட வேண்டாம். கடவுள் உங்களுக்கு வேறு வாய்ப்பு வழங்க காத்திருக்கின்றார். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என்று அவர் பேசி இருப்பது மாணவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது