காமராஜரின் 122ஆவது பிறந்தநாளை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
“பாரத ரத்னா மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திரு காமராஜரின் பிறந்தநாளில் அவருக்கு எனது பணிவான அஞ்சலிகள். ஒரு உண்மையான தேசபக்தர் மற்றும் வெகுஜனத் தலைவர், அயராது உழைத்து சமூகத்தின் நலிவடைந்த பிரிவினரை உயர்த்த மற்றவர்களை ஊக்கப்படுத்தியவர். கல்வி தந்தை என்ற அவரது மரபு எப்போதும் நினைவில் நிற்கும்” எனக் கூறியுள்ளார்.