நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் மணிகண்டன் (32). இவருடைய மனைவி சிவரஞ்சனி. இவர்களுக்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே மணிகண்டனுக்கும், வேறு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது ரகசிய உறவு மணிகண்டன் வீட்டுக்கு தெரியவர அவர் கள்ளக்காதலியுடன் சேலம் எடப்பாடி பகுதிக்கு சென்று வசித்து வந்தார். இதனிடையே டாஸ்மாக் கடை அருகில் விஷமருந்தி மயங்கி கிடந்தார். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், உயிரிழந்தார்.