திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியை சேர்ந்த ரவுடி விஷ்ணு (24), லட்சுமணன் (26) ஆகியோர் நண்பர்கள். லட்சுமணனின் வீட்டிற்கு விஷ்ணு அடிக்கடி சென்ற நிலையில் லட்சுமணனின் மனைவியுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று இரவு விஷ்னுவும், லட்சுமணனும் மது அருந்த சென்றுள்ளனர். அப்போது கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்ட போது ஆத்திரமடைந்த விஷ்னு, லட்சுமணனை கத்தியால் வெடிக் கொலை செய்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.