கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். பலரும் அரசுக்கு எதிராக தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தவெக தலைவரும், நடிகருமான விஜய், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து உயிரிழந்தவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.