கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் எதிரொலிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். ஜூலை 10இல் அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ள எதிர்க்கட்சிகள், போராட்டம், ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது திமுக அரசுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.