கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். விஷச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை சந்தித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா நேரில் ஆறுதல் தெரிவித்தார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை சென்ற பிரேமலதா பாதிக்கப்பட்டவர்களுக்கு தரப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். இதனிடையே கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.