கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 8 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 13 பேரில் ஒரு பெண் உள்பட மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயம் குடிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் கருணாபுரத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.