கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண சம்பவத்தில் விசாரணை அதிகாரியாக விழுப்புரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி குறித்து விசாரணைக்காக சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிபிசிஐடி ஐஜி அன்பு தலைமையில் விசாரணை அதிகாரியாக கோமதி நியமிக்கப்பட்டுள்ளார். விஷச்சாராயம் குடித்து 31 பேர் வரை உயிரிழந்துளள நிலையில் வழக்கை சிபிசிஐடி விசாரிக்கிறது. சிபிசிஐடி ஐஜி அன்பு தலைமையிலான அதிகாரிகள், விசாரணை அதிகாரி கோமதி இன்று கள்ளக்குறிச்சிக்கு நேரில் செல்கின்றனர்.
இதனிடையே கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் சிலர் உயிரிழந்ததால் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சியில் 20, சேலத்தில் 5, விழுப்புரத்தில் 4,புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர் எண்ணிக்கை 100க்கும் மேற்பட்டோராக அதிகரித்துள்ளது.
விஷ சாராய பலி காரணமாக கள்ளக்குறிச்சி மருத்துவமனை முன்பாக ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. விஷச்சாராய பலி காரணமாக கள்ளக்குறிச்சி எஸ்பி, டிசி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட காவல் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அதிவிரைவு, ஆயுதப்படை என ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.