கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட 140-க்கும் மேற்பட்டோர் சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். இதில் 56 பேர் நேற்று வரை உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். விஷச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாபுரத்தை சேர்ந்த மதன் (46) என்பவர் இன்று உயிரிழந்தார்.