கள்ளக்குறிச்சி விஷச்சாராய விற்பனை வழக்கில் முக்கிய குற்றவாளி சிவக்குமார் சென்னையில் கைது செய்யப்பட்டார். 57 பேரின் உயிரிழப்புக்கு காரணமான விஷச்சாராயத்திற்கு இவரே மெத்தனால் சப்ளை செய்துள்ளார். இந்நிலையில், சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த அவரைக் கைது செய்த போலீசார், கள்ளக்குறிச்சி அழைத்துச் சென்றனர். இவ்வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.