விஷச்சாராயத்தின் வரலாறு தெரிந்துகொண்டு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசவேண்டும் என, திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ஏன் அமல்படுத்தவில்லை என நிர்மலா சீதாராமன் எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் விஷச்சாராயத்தால் கொத்துக்கொத்தாக மக்கள் இறந்ததால்தான், 1972இல் மதுக்கடைகள் திறக்கப்பட்டதாக காரணம் தெரிவித்துள்ளார்.