கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை பலரும் உயிரிழந்துள்ள நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வருகை தந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஷ சாராய அருந்தியவர்கள் மருத்துவமனைக்கு செல்ல தயங்கியதே உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என்றும், விஷ சாராய அருந்திய 9 பெண்கள் உட்பட 168 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதில் 3 பெண்கள் உட்பட 48 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.