கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ள சாராயம் குடித்த 4 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். 4 பேரில் 2 பேரு கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மற்றவர்களும் கள்ளச்சாராயம் குடித்ததால்தான் உயிரிழந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.