செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே கள்ளச்சாராயம் குடித்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மலுவங்கரணை பகுதியில் சாராயம் காய்ச்சிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்த மூன்று பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று இருவர் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.