கள்ளக்குறிச்சி கருணாபுரம் மேட்டு தெருவை சேர்ந்த சுரேஷ் (40), வடிவுக்கரசி (32) தம்பதியினர் விஷ சாராயம் குடித்து பாிதாபமாக உயிரிழந்தனர். கூலி வேலைக்கு செல்லும் தம்பதி உடல்வலியை போக்குவதற்காக வழக்கமாக மதுகுடிப்பது வழக்கம். அதேபோல் கடந்த 18ம் தேதி வேலையை முடித்துவிட்டு திரும்பிய தம்பதியர் உடல்வலியை போக்குவதற்காக இரவு சாராயம் வாங்கி குடித்துள்ளனர். பின்னர் வீட்டில் படுத்திருந்த தம்பதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் அவர்களுடைய ஹரி(14), ராகவன்(13) கோகிலா (16) என்ற 3 குழந்தைகளும் தற்போது அனாதைகளாக நின்றுள்ளனர்.