கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்ததில் கல்லீரல், சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்பு உள்ளிட்ட கடும் உபாதைகளால் 5 பெண்கள் உட்பட 65 பேர் இதுவரை உயிரிழந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவராமன் என்பவரும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனை தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.