கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் விற்கப்பட்ட பாக்கெட் சாராயத்தில் மெத்தனால் கலக்கப்பட்டுள்ளது. மெத்தனால் கலந்த பாக்கெட் சாராயத்தை அருந்தியதால் உயிர் பலி ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. பாக்கெட் சாராயம் விற்பனை செய்த கோவிந்தராஜ் என்ற கண்ணு குட்டி கைது செய்யப்பட்டுள்ளார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கண்ணு குட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினரை கூண்டோடு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கள்ளச்சாராய பலி எதிரொலியின் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியதால் எஸ்பி சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளச்சாராயத்தால் உயிர் பலி இல்லை என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் கூறியிருந்த நிலையில், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக எம்.எஸ் பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கள்ளச்சாராய பலி எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர்கள் கவிதா, பாண்டி செல்வி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருக்கோவிலூர் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன், உதவி காவல் ஆய்வாளர்கள் பாரதி, ஷிவ் சந்திரன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.