கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று முதல் போலீசார் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக இரவு பகலாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பழைய குற்றவாளிகளின் செயல்பாடுகள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.