இதுவரை அரசியல் தலைவர்களுக்கு வாழ்த்து மட்டுமே கூறி வந்த தவெக தலைவர் விஜய் முதல்முறையாக விஷச்சாராய உயிரிழப்பு சம்பவத்திற்கு தமிழக அரசை விமர்சித்துள்ளார். அவரது x பதிவில், கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.