கள்ளச்சாராயம் விற்பனை குறித்தத் தகவல்களை தெரிவிக்குமாறு, அனைத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாவட்ட மேலாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்ததில், இதுவரை 49 பேர் பலியாகியுள்ளனர். பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அனைத்து மாவட்ட டாஸ்மாக் ஊழியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், கடை அமைந்துள்ள பகுதியில் கள்ளச்சாராயம் விற்பது தெரியவந்தால், உடனடியாக தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.