சென்னை சைதாப்பேட்டை பகுதியில் தொடர் வயிற்றுப்போக்கு காரணமாக பீகாரை சேர்ந்த 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்துள்ளான். குடிநீரில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கழிவுநீர் கலந்து வருவதாக பகுதி மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். உயிரிழந்த சிறுவனின் தங்கையான 7 வயது சிறுமிக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.