தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் நடிகை ராஷ்மிகாவும் ஒருவர் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வாரிசு. இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். இந்த நிலையில் நடிகை ரஷ்மிகா பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கிய பின் அதிக கவர்ச்சி காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இது குறித்து பேசிய அவர், “ரோம் நகரில் இருப்பவர்கள் ரோமானியர்கள் போலத்தான் வாழ வேண்டும். அதுபோல, பாலிவுட்டில் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படிதான் நானும் இருக்கிறேன். அதேநேரம், எனக்கென்று சில எல்லைகள் உள்ளன. அவற்றை எப்போதும் மீற மாட்டேன்” என்றார்.