தெலுங்கானாவில் சோப்தண்டி காங்கிரஸ் எம்எல்ஏ மெடிப்பள்ளி சத்தியத்தின் மனைவி ரூபாதேவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்வால் பகுதியில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்ட அவர் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கணவன் மனைவியிடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு இருந்ததாகவும் கூறப்படுகிறது.