காசாவில் குழந்தைகள் போலியாவால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் செய்திதொடர்பாளர் கூறும்போது, காசாவில் கழிவுநீர் மாதிரிகளில் தொற்று நோய் கிருமிகள் இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் காசாவிற்கு 1 மில்லியன் போலியோ தடுப்பூசிகளை அனுப்புகிறது. தடுப்பூசிகள் குழந்தைகளை சென்றடைவதை உறுதிசெய்ய போர்நிறுத்தம் தேவை என்றார்.