மத்திய காசாவில் உள்ள பள்ளி மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 30 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறியுள்ளது. தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.