காசாவில் இருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட பாதை வழியாக உடனே வெளியேற வேண்டுமென இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் எச்சரிக்கையால் அங்கு வசித்து வரும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான ரீப் போர் நடவடிக்கையை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருவதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது.