காசா மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது 70 ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லா அமைப்பு வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்கு லெபனான் மீதான இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதால், அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்களை ஹிஸ்புல்லா நடத்தி உள்ளது. மேற்கு கலிலியில் இஸ்ரேலின் ராணுவ நிலைகளின் மீது ஹிஸ்புல்லா ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதல் குறித்து லெபனான் ராணுவம் அறிக்கையும் வெளியிட்டுள்ளது.